| இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் - வெளியான அறிவிப்பு!*
💠 மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
💠 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.
💠 283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
💠 மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
💠 இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையிலும், சுப்பர் டீசலின் விலையிலும் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.
0 Comments