Hot Posts

100/recent/ticker-posts

உயர் தர பரீட்சை தொடர்பான செய்தி போலியானது

 * உயர்தர பரீட்சை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பு எனும் செய்தி போலியானது.*

 




நாட்டில் நிலவிவரும் அசாதாரணமான வானிலை காரணமாக உயர்தர பரீட்சை 3 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் (26) செய்தி வெளியாகியிருந்தது.


அதே சந்தர்ப்பத்தில் மீண்டும் 10 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருவதை தொடர்ந்து எழுமின் செய்திகளுக்கு அது அனுப்பி வைக்கப்படிட்டிருந்தது. குறித்த செய்தியினை உண்மை சரிபார்ப்பு கருவிகள் மூலம் எமது ஊடகவியலாளர்கள் ஆராயும் பொழுது அதுவொரு போலி செய்தி என்பது உறுதியாகியுள்ளது. 


இடர் கால சூழலில் யாரும் மாணவர்களின் மனநிலையை பாதிக்காத வகையில் நடந்துக் கொள்வது சாலச்சிறந்ததாகும். உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ செய்திகளை மாத்திரம் செவிமடுங்கள். தயவுசெய்து போலி செய்திகளை பரப்புவது மற்றும் பகிர்வதில் இருந்து விலகியிருப்போம்.



Post a Comment

0 Comments