சீரற்ற வானிலை - அம்பாறையில் அதிக உயிரிழப்பு!
நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சீரற்ற வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களிலும் உள்ள 227 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது, 120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு தங்கியிருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28,324 குடும்பங்களைச் சேர்ந்த 94,134 பேர் உறவினர் வீடுகளில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அதிகளவான அனர்த்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 8 பேர் அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும் 1,952 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 Comments